ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம் .

Update: 2024-03-15 10:56 GMT

ஆர்பாட்டம்

தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனி,நீதி,வீரப்பன்,அழகுதுரை, துரை முன்னிலை வகித்தனர்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன்,விதொச மாநில செயலாளர் ஜெ.பிரதாபன், ஏஐடியூசி மாநில. துணை செயலாளர் கே.மணி,உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் என்.மனோகரன்,ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.ஓட்டுனர்களை கொலை குற்றவாளியாக மாற்றும் பாரதிய நியாய சஞ்சிதா (TNS 106-2) சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.10 வருடம் சிறை,ஏழு லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நல வாரியத்தின் மூலமாக இஎஸ்ஐபிஃப், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.ஆன்லைன் அபராதத்தை உடனே வாபஸ் வாங்க வேண்டும். 60 வயது முடிந்த வாகன ஓட்டுனர் ஆட்டோ பணியாளருக்கு ரூ.6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்யும் உரிமைகளை பறிக்கும் ஓலா, உபர்,ராபிடோவை தடை செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் ஆந்திரா, புதுச்சேரி அரசுகள் வழங்குவது போல் ரூபாய் 5000 போனஸ் வழங்க வேண்டும்.அபரிமிதமாக உயர்த்தப்பட்ட சாலை வரியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலியை துவக்கி அரசே ஏற்று நடத்த வேண்டும்.நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ, மோட்டார் தொழிலாளர்களுக்கு வீடு அல்லது வீட்டுமனை,வீடு கட்ட 4 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர்களுக்கு வரி இல்லாமல் மானிய விலையில் பெட்ரோல் டீசல் கேஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆர்பாட்டத்தில் கவுரவ தலைவர் மாது,மாவட்ட துணைத்தலைவர் ரவி,துணை செயலாளர் அறிவழகன்,நிர்வாகிகள் முருகன்,சதீஸ்குமார்,செல்வராஜ், ராஜா,ஆண்டியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News