மார்க்சிஸ்டு கம்யூ கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம்
எலச்சிபாளையத்தில் பெண்களை தாக்கிய வழக்கில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்டு கம்யூ கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.;
By : King 24x7 Website
Update: 2024-03-12 14:53 GMT
எலச்சிபாளையத்தில் பெண்களை தாக்கிய வழக்கில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்டு கம்யூ கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமம், சத்யாநகரில் வசித்து வரும் இந்திய கம்யூ., கட்சியின் நிர்வாகி மாரிமுத்து, அவரது மகன் பெரியசாமி, அவரது மைத்துனர் முருகேசன் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதே பகுதியைச் சேர்ந்த இரு இளம் பெண்களுடைய மேலாடைகளை கிழித்து அடித்து உதைத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுசம்பந்தமாக, கடந்த 2021 ஏப்.24ல் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எப்படியாவது இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று மாரிமுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்களை மிரட்டி, வழக்கை வாபஸ் வாங்கு என அச்சிறுத்தையும் வருவதோடு அல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், நியாயமும் கிடைத்திட துணை நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீதும், சமூக ஆர்வலர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி களங்கப்படுத்தி வருகிறார் என கூறி, நேற்று மாலை 6மணியளவில் எலச்சிபாளையம் பஸ்நிறுத்தத்தில், மார்க்சிஸ்டு கம்யூ., கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தார் மீதான வழக்கில் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இனியும் காலதாமதம் செய்யாமல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் என ஆர்பாட்டம் செய்தனர். கவுன்சிலர் சுரேஷ் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.