56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்

சிவகங்கையில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Update: 2024-07-02 05:11 GMT

சிவகங்கையில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்


சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.6,000/- மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினையும், கூட்டுறவுத்துறையின் சார்பில், இடையமேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக 04 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.2,00,000/- மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளிக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 01 பயனாளிக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 05 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,050/- வீதம் மொத்தம் ரூ.45,250/- மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள்கள், 09 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900/- வீதம் மொத்தம் ரூ.71,100/- மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலிகள், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 13,349/- வீதம் மொத்தம் ரூ. 1,46,839/- மதிப்பீட்டிலான தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகள் என மொத்தம் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,63,189/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.4,00,000/- வீதம் மொத்தம் ரூ.8,00,000/- மதிப்பீட்டிலான உதவித்தொகைக்கான ஆணைகளையும், 01 பயனாளிக்கு ரூ.5,00,000/- மதிப்பீட்டிலான பணியிடத்து விபத்து மரணம் உதவித்தொகைக்கான ஆணையும், 03 பயனாளிகளுக்கு ரூ.6,10,000/- மதிப்பீட்டிலான சாலை விபத்து உதவித்தொகைக்கான ஆணைகளையும், 12 பயனாளிகளுக்கு தலா ரூ.55,000/- வீதம் மொத்தம் ரூ.6,60,000/- மதிப்பீட்டிலான இயற்கை மரணம் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 03 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000/- வீதம் மொத்தம் ரூ.60,000/- மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 04 பயனாளிகளுக்கு தலா ரூ.1,200/- வீதம் மொத்தம் ரூ.4,800/- மதிப்பீட்டிலான ஒய்வூதிய உதவித்தொகைக்கான ஆணைகளையும் என ஆக மொத்தம் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.31,03,989/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.
Tags:    

Similar News