விவசாயிகளுக்கு மானியத்தில் சுழற்கலப்பைகளை வழங்கல்
ஊத்துமலை விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற்கலப்பைகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-07-02 06:13 GMT
ஊத்துமலை விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற்கலப்பைகள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக விவசாயிகளுக்கு மானியத்தில் சுழற்கலப்பைகளை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் செயலர் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து சுழற்கலப்பைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர் அறிவழகன், ஊத்துமலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மலர்கொடி கோட்டைச்சாமி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.