விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-28 14:20 GMT

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 

 இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிக்கான இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 407 மனுக்கள் பெறப்பட்டது. 

   இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து,

அதில் ஒரு நபருக்கு ரூ.10,200 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளையும், மற்றொரு நபருக்கு ரூ.3200 மதிப்பில் காதொலி கருவியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்

Tags:    

Similar News