திருவாரூர் அருகே மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கல்
திருவாரூர் அருகே ஒன்றிய பெருந்தலைவர் தேவா பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 13:26 GMT
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியகுழு உறுப்பினர் தஔலத் இக்பால், ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணை தலைவர் கார்த்தி ,ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞான சேகர் ,பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.