வாணியம்பாடியில நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வாணியம்பாடியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை திறந்து வைத்து, 11கோடியே 22 லட்சத்து53 ஆயிரம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஏ.வ.வேலு வழங்கினார்.

Update: 2024-02-17 14:31 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை நெடுஞ்சாலை, மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு இன்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில்,

வருவாய் துறை சார்பில் நடைப்பெற்ற ஆம்பூர், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று 12 துறைகள் சார்பில் 1985 பயனாளிகளுக்கு சுமார் 11 கோடியே 22 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை அமைச்சர் ஏ.வ.வேலு வழங்கினார்,

மேலும் இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் வேலூர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்...

Tags:    

Similar News