தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21.43 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Update: 2024-03-15 13:21 GMT
மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் வழங்கல்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.21.43 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,இன்று (15.03.2024) வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதன் மூலம் அவர்களும் இந்த சமுதாயத்தில் சுய மதிப்போடு வாழமுடியும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், இன்று தலா ரூ.96,011/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 14 நபர்களுக்கும், தலா ரூ.13,349/- மதிப்பிலான ஸ்மார்போன் 44 நபர்களுக்கும், தலா ரூ.1.06 இலட்சம் மதிப்பிலான பேட்டரி வீல்சேர் 2 நபர்களுக்கும் என மொத்தம் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21.43 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News