புதுகையில் இன்றும் நாளையும் மனநல மருத்துவ கருத்தரங்கு!
புதுகையில் இன்றும் நாளையும் மனநல மருத்துவ கருத்தரங்கு.;
Update: 2024-04-27 05:21 GMT
மனநல மருத்துவ கருத்தரங்கு
புதுக்கோட்டை இந்திய மனநல மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளை சார்பில் மாநில அளவிலான 3ஆவது மருத்துவக் கருத்தரங்கு புதுக்கோட்டையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27, 28) நடைபெறுகிறது. புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கருத்தரங்கு தொடங்குகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 150 மனநல மருத்துவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.மனநல மருத்துவத்தில் மருத்துவத் திறன்களுக்கான வழிகாட்டுதல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், தேர்ந்த கட்டுரைகளைக் கொண்ட சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவச் சங்கத்தினர் செய்துள்ளனர்.