அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
எடப்பாடி அரசு போக்குவரத்து கழக பனிமனை மேலாளரை கண்டித்து புதுப்பாளையத்தில் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு உண்டானது.;
Update: 2024-05-27 09:15 GMT
எடப்பாடி அரசு போக்குவரத்து கழக பனிமனை மேலாளரை கண்டித்து புதுப்பாளையத்தில் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு உண்டானது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து புதுப்பாளையம் வழியாக சேலத்திற்கு தினமும் அரசு பேருந்து செல்வது வழக்கம் இந்தப் பேருந்தை அடிக்கடி எடப்பாடி பணிமனை மேலாளர் ரத்து செய்து விடுவதாக கூறிபுதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் அரசு பேருந்தை வழிமறித்து சிறைப்பிடித்தது எடப்பாடி அரசு பணிமனை மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து பேருந்து ஓட்டுனர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இது சம்பந்தமாக சேலம் அரசு பணிமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேசி இனிவரும் காலங்களில் இது போல் செயல் நடைபெறாத என கூறியதின் பேரில் பேருந்து விடுவிக்கப்பட்டது.