ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர்கள் மீது பொதுமக்கள் புகார் மனு

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் போது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2024-03-11 11:21 GMT

மனு

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுதர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மனு. திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் பகுதியில் வசித்து வந்த திருமூர்த்தி சாந்தி தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களாக எலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டு சேர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏலச்சீட்டை நிறுத்துவதாகவும் தங்களால் நடத்த முடியவில்லை எனவும் தங்கள் கட்டிய பணத்தை வீட்டை விற்று ராம் லட்சுமி என்ற வழக்கறிஞர் மூலம் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.  இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வீடு விற்ற பணத்திலிருந்து ராம் லட்சுமி ஆபிஸில் வைத்து 17 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதாகவும் ,  மேலும் 26 பேருக்கு 21 லட்சம் ரூபாய் வரை தரவேண்டிய நிலையில் பணம் தர முடியாது என தெரிவிப்பதாகவும் இது குறித்து மாநகர காவல் ஆனையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தையும் வாங்கி தர வேண்டும் என அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
Tags:    

Similar News