சிப்காட் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சிப்காட் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-12 07:20 GMT

தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி கிராமம் எர்ரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள கே.ஜே. மாளிகையில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான் கோட்டை மற்றும் பால ஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட் (SIPCOT) நிறுவனம் நிறுவ சுற்றுச்சூழல் அறிவிப்பாணை சட்டப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முன்னிலையில் பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திமுக சார்பில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.நிகழ்வில் மாவட்ட கழகப் பொருளாளர் தங்கமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News