அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பகுதியில் சாலை, கழிவு நீர்கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-01 07:12 GMT

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கோரம்பள்ளம் பகுதியில் சாலை, கழிவு நீர்கால்வாய், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோரம்பள்ளம் பி.எஸ்.பி நகர் மற்றும் ஶ்ரீனி நகர் பகுதி மக்கள் பொதுமக்கள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடியில் கோரம்பள்ளம் கிராமம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மிகவும் அருகாமையில் உள்ள கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குளத்தின் மூலமாக பல அரசு அலுவலகங்களுக்கு கிணற்றின் மூலமாக தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.

இப்படி பெருமை மிகுந்த கிராமத்தின் அவல நிலை என்பது கோரம்பள்ளம் கிராமம் தற்போது தொடர்ச்சியாக பல பொதுமக்கள் நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரியநாயகபுரத்தில் கூட தார் சாலைகள் தெளிவாக போடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கோரம்பள்ளம் பஞ்சாயத்தின் முக்கிய நகர்ப்புற விதியான கோரம்பள்ளம் ஊரின் நுழைவு வாயில் பகுதியில் செல்லக்கூடிய சாலைகள் மிகவும் பழுதாகி மக்கள் மிகவும் சிரமப்பட்டு பயன்படுத்த கூடிய சூழ்நிலை உள்ளது. இதே போன்று பி.எஸ். பி நகர் 2வது தெருவில் தனியார் கம்பெனி வாயலில் அபாயகரமான டிரான்ஸ்பார்மர் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

விரைவில் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக கடந்த காலங்களில் இரு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது விரைவில் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அந்த ட்ரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும். அந்த கம்பெனி முன்பாக வரை வடிகால் நிறுவப்பட்டு வடிகால் ஆனது அதன் தொடர்ச்சியாக பட்டா இடத்தில் கொண்டு அனைத்து கழிவு நீரையும் கொண்டு சென்று பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசப்பட்டு தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையில் அந்த கழிவுநீர் விடப்பட்டுள்ளது.

அப்படி என்றால் அந்த வாடிகாலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொடுக்கப்பட்ட வரைபடத்தின் வாயிலாக எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை. அந்தப் பகுதியில் சாலைகளும் குண்டும் குழியுமாக போடபட்டுள்ளது. கோரம்பள்ளம் பகுதி மக்களின் வாழ்க்கை என்பது கண்ணீர் கதையாக உள்ளது. கோரம்பள்ளம் பகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News