நெடுஞ்சாலை வேகதடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் தேவையில்லாத வேகத் தடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினர் வேகக்தடைகள் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் காட்டுவதில்லை.தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேகத் தடைகள் எந்த அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் குடும்பத்தினர் அதிகமாக சிறு சிறு விபத்துகளில் சிக்கி காவல்துறை இடம் புகார் அளிக்காமல் செல்கிறார்கள்.
உயிர் சேதம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. அதுவும் வேகத்தடை தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படுவதில்லை. பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள் எல்லாம் வேகத் தடைகள் அமைத்துள்ளனர். யார் யாரெல்லாம் ரியல் எஸ்டேட் பண்ணி பிளாட்டுகள் போடுகிறார்களோ அவர்கள் பிளாட் டுகளின் முன்னால் எல்லாம் மிகப் பெரிய ஆபத்தானவேகத்தடைகள் போடப்பட்டுள்ளது.
உதாரணமாக புதுக்கோட்டையில் இருந்து ஏரலுக்கு செல்லக்கூடிய 12 கிலோமீட்டர் சாலையில் 35 வேகதடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்ற சொன்னால் எந்த நட வடிக்கையும் எடுப்பது கிடையாது தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு வேகத்தடைத் துறை என புதிதாக பொதுமக்கள் பெயர் வைத் துள்ளனர். சாலைகள் அமைக்கப்படுவது, அவசரத்துக்குவேகமாகசெல் வதற்குதான். இந்த வேகத்தடைகளினால் ஆம்புலன்ஸ் மற்றும் ஃபயர் சர்வீஸ் வண்டிகள் செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேவையில்லாத வேக தடைகளை எல்லாம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.