சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Update: 2023-11-08 10:26 GMT
சேதமடைந்த சாலை
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருதா திட்டத்தின் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு குழிகள் தோண்டப்பட்டது. சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.