சனத்குமார நதியை மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாரதிபுரம் பகுதியில் இருந்து அன்னாசாகரம் பகுதிக்கு செல்லும் வழியில் குப்பைகளால் கழிவுநீராக மாறிய சனத்குமார நதியை மீட்டெடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2024-05-13 11:20 GMT

தர்மபுரி நகரப் பகுதி மற்றும் தர்மபுரியில் உருவாகி மிகவும் பாரம்பரியமிக்கதாகவும் வரலாற்று சிறப்புமிக்க நதிகளில் ஒன்றாக இருப்பது சனத்குமார் நதி இந்த நதி அன்னாசாகரம் வழியாக மதிகோன்பாளையம் மற்றும் பழைய தர்மபுரி பகுதியில் கடந்து செல்கின்றது இந்த நிலையில் பாரதிபுரம் பகுதியில் இருந்து அன்னாசாகரம் பகுதிக்கு செல்லும் வழியில் சனத்குமார் நதியின் குறுக்கே கட்டிடக் கழிவுகள், வீட்டின் குப்பைகள், மற்றும் பயன்படாத வீட்டு உபயோக பொருட்கள், மதுபான பாட்டில்கள் என அனைத்தும் நதியின் குறுக்கே கொட்டி உள்ளனர்.

மேலும் நதியினை சரிவர தூர்வராததால் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக முட்புதர்கள் மற்றும் நாணல்கள் மூங்கில் செடிகள் மற்றும் பல்வேறு விதமான விஷச் செடிகள் சூழ்ந்துள்ளதால் நதி செல்ல வழி இல்லாமல் கழிவுநீர் கால்வாயாக தேங்கியுள்ளது மேலும் பலரும் இங்கே தேவை இல்லாத பொருட்களைக் கொண்டு வந்து கொட்டுவதால் சரத்குமார் நதி முழுவதும் சீரடைந்துள்ளது.

இதனால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதனை விரைந்து சரி செய்து தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News