நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
சங்கரன்கோவிலில் நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்.
Update: 2024-03-20 01:50 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் நடமாடக் கூடிய நகர் பகுதி முழுவதும் வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் மக்களை தெருநாய் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடனே நகராட்சி வந்து பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள நாய்களைப் பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.