பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்!
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்! திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார்மனுக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, துரிதமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாமில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி கலந்து கொண்டார்.இம்முகாமில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரப்பெற்ற பொதுமக்களின் 15 புகார்மனுக்கள் சம்பந்தமாக, காவல் நிலைய அதிகாரிகள் மேற்படி மனுதாரர்கள் எதிர்மனுதாரர்களை மேற்கு மண்டல காவல்துறை தலைவர்,காவல் கண்காணிப்பாளர் முன்பாக ஆஜர்படுத்தி, உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கு தீர்வுகளும் காணப்பட்டது.