கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

Update: 2023-11-22 09:01 GMT

குறைதீர் முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 கரூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கட்டிட உரிமை பெறுதல், காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, புதிய சொத்து வரி, தொழில் வரி விதித்தல், பாதாள சாக்கடை, சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வு காண  ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News