காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் நடந்த  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 37 மனுதாரர்கள் மனு அளித்தனர்.

Update: 2024-01-05 05:22 GMT

குறைதீர் முகாம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க வந்த 37 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News