எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-01-04 06:10 GMT
புதன்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது . எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் 16 மனுதாரர்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாக கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.