நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் : சீமான் பங்கேற்ப

நாடளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2024-04-09 03:58 GMT

நாடளுமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மனோஜ்குமார், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அபிநயா ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான் மாறி, மாறி ஓட்டுபோடுகிறீர்கள். ஏதாவது மாற்றம் நடந்ததா? மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை கிடையாது.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3 கட்சிகளும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படி இல்லை. நமது இன உரிமைகளையும், நமது நாட்டையும் மீட்க போராடுவதற்காக தனித்து நிற்கிறோம். எனக்கு வாக்கு அளிக்காவிட்டாலும், ஏன் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் நாங்கள் தோற்கவில்லை.

வெற்றியை துரத்தி செல்கிறோம். அது ஒருநாள் எங்கள் கையில் சிக்கும். வீதியில் நின்று பேசும் சீமானின் பிள்ளைகளும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள். அதுவரை எங்களது பிள்ளைகள் சோர்வு அடைய மாட்டார்கள். எதிர்காலத்தை சிந்தித்து அனைவரும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

Tags:    

Similar News