திராவிடக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திராவிடக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-04 09:43 GMT

பொதுக்கூட்டம் 

விருதுநகரில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திராவிடக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் பேசியவர், நானெல்லாம் ராசி பார்க்கக் கூடிய ஆள்.‌ ஆனால் திராவிடர் கழக தலைவர் ராசி பார்ப்பது கிடையாது. ஆசிரியர் வீரமணி விருதுநகர் வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி என பேசி முடித்தார். அதன்பின்னர் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, பத்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கும் மோடி அரசுக்கு ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கிற பொழுது மிக முக்கியமாக இந்த குரல் கூட ‌ கேட்கக்கூடாது என்பதற்காக ‌ வெளியே அனுப்பப்பட்டு ‌ மக்களால் மீண்டும் உள்ளே அனுப்பப்பட உள்ள நமது வெற்றி வேட்பாளர் ‌ மாணிக்கம் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவில் ‌ முன் உதாரணமான ‌ மாநிலமாக தமிழகம் திறந்து வருகிறது. தாய் வீட்டு சீதா கூட வராது ஆனால் எங்கள் ஸ்டாலின் ஆட்சியில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. ஐந்து பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி. பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் புதுமைப்பெண் திட்டம் போல கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கேரண்டி கேரண்டி என கூறுகிறார். இதுவரையில் அவர் கொடுத்த டீ குஜராத்தி. பிரதமர் மோடி சொன்ன எந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த முறை இந்திய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை எனில் இந்தியா தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருக்கும். நாட்டின் ஜனநாயகம் அழிந்து வருகிறது. அதனை மீட்க இந்திய கூட்டணி தலைவர்களால் மட்டுமே முடியும். மாணிக்கத் தாகூர் உட்பட 146 வரை விலகி அனுப்பினார்கள். எதிர்க்கட்சிகள் எந்த காலத்தில் யாவது 145 பேரை வெளியே அனுப்பியுள்ளார்களா. இது ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து. எம்பிகளின் ஐந்து ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சிகளின் ‌ துணை சபாநாயகரே ‌ பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உடைய சர்வாதிகாரத்தனம். பிரதமர் மோடி 140 கோடி ‌ மக்களையும் என் குடும்பம் அப்படி ஒரு ‌ பிரதமர் தான் வர வேண்டும். முதலில் முதல்வர் என்று கூறிவிட்டு பின்னர் பிரதமர் என மாற்றி கூறினார்.
Tags:    

Similar News