திருச்செங்கோடு நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-26 11:41 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மற்றும் திருச்செங்கோடு நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சங்ககிரி ரோடு ரவுண்டானா அருகில் நடைபெற்றது.நகரக் கழகச் செயலாளர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

திமுக மாவட்ட வர்த்தக அணி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வரவேற்றார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜபாண்டி ராஜவேல் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகரமைப்பு திட்டகுழு உறுப்பினர் மதுரா செந்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் திருப்பூர் மனோகர் பாபு குன்னூர் கலிம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள், நிகழ்ச்சியில் மாநில வலைதள அணி பொறுப்பாளர் ரியா, மாநில ஆதிதிராவிடர் நலக்குழுதுணைச் செயலாளர் பரமானந்தம்,

முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தாண்டவன் உள்ளிட்ட மாவட்ட சார்பு அணியினர் நகர் மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் மகளிர் அணியினர் வார்டு பிரதிநிதிகள் நகர செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்கூட்டத்தில் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதரா செந்தில் கூறியதாவது மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தும் தகுதி பெற்ற ஒரே கட்சி திமுக தான் மொழி திணிப்பை என்றும் எதிர்த்து வருகிறோம் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல எந்த மத உணர்வையும் புண்படுத்துபவர்கள் அல்ல நாங்களும் இந்துக்கள் தான் இந்துக்களை பிளவுபடுத்த பாஜக சக்திகள் முயல்கின்றன.

இதில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெற கட்சியினர் முழுமூச்சுடன் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் கூட்டத்தின் முடிவில் ஏழாவது வார்டு திமுக செயலாளர் சுல்தான் ஷெரீப் நன்றி கூறினார்.

Tags:    

Similar News