தேர்தல் நிதி வழங்கும் பொதுக்கூட்டம்
தேர்தல் பத்திரமூலம் அடித்த கொள்ளை மறக்கடிக்கவே குடியுரிமை சட்டத்தை பாஜக அமல்படுத்தி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் நிதி வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்சி தலைமைக்கு தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது கடந்த மத்திய அரசின் அமைச்சரவையில் 9 கேபினட் அமைச்சர்கள் தருகிறோம் என்று அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியபோதும் அது வேண்டாம் நாட்டில் விவசாயம் இயந்திரமாகிவிட்ட நிலையில் அவர்களை காப்பாற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று பேசினார். தொடர்ந்து பேசுகையில் நாட்டை ஆளக்கூடிய பிரதம மந்திரி தனக்கு கல்யாணம் ஆகியதை மறைத்து பொய் சொல்லி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும் தன் மனைவியை வைத்து குடும்பம் நடத்தி வாழ வழி தெரியாத நபர் நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு 140 கோடி மக்களும் என் குடும்பம் என்கிறார்.
இது மிகவும் அபத்தமானது என்றும் மக்களின் அதிகபட்ச நம்பிக்கையான நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான நீதிபதிகள் தங்களின் அடுத்த கட்ட பதவிக்காகவே தீர்ப்புகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.
தேர்தல் பத்திரம் மூலம் நாட்டின் சுமார் 60% நிதியை பிரதிபலனுக்காக நன்கொடை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தற்போது அது விமர்சனத்திற்கு உள்ளாவதால் அதை மறக்கடிக்க கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஏற்கப்படாத இந்திய குடியுரிமை சட்டத்தை தற்போது அமல்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி விடுவதற்காகவும் இது வன்மையாக கண்டனத்திற்குரியது என்றும் இதிலேயும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்த மோடி தமிழ்நாட்டில் எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்த இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் வஞ்சித்ததாகவும் கூறினார்.
மேலும் பேசுகையில் தற்போது ஆளும் பிரதமர் மோடி இந்திய வரலாற்றில் உள்ள பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, வி பி சிங், மொரார்ஜி தேசாய் மற்றும் அவர் கட்சியைச் சேர்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் போல செயல்படாமல் சர்வாதிகாரியான நாசக்கார ஹிட்லர் போல் செயல்பட்டு நாட்டு மக்களை அடிமையாக்கி வருவதாகவும் ஆகையால் வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு உரிய பாடம் கற்பித்து மீண்டும் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைய நாம் வழிவகை செய்யக்கூடாது என்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.