கல்குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
காட்டுமுன்னூரில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, முன்னூர் கிராமத்தில் T.மனோஜ் குமார் நிறுவனத்தாரின் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்காக, கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நடத்திய பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் காட்டுமுன்னுரில் உள்ள வி.பி. கல்யாண மஹாலில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, குவாரி அமைப்பதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்த அனைத்து கருத்துகளும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.