கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, குப்பம் கிராமத்தில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய கல்குவாரிகள் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குப்பம் பகுதியில் செயல்படும் சண்முகம் நிறுவனத்தாரின் சாதாரண கல்குவாரிக்கும், தேவராஜ் நிறுவனத்தாரின் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்கும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குப்பம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, கல்குவாரி அமைப்பதற்கான சாதக, பாதகங்களை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட அனைத்து கருத்துக்களும், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.