கோவில் நிலத்தில் சுகாதார நிலையம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

எடப்பாடி அருகே கோவில் நிலத்தில் சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு வலுத்துள்ளது.

Update: 2024-02-06 12:30 GMT

  எடப்பாடி அருகே கோவில் நிலத்தில் சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு வலுத்துள்ளது.

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட செல்லியாண்டியம்மன் கோவில் நிலத்தில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு .

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சின்னமணலியில் ஸ்ரீ செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 72 சென்ட் நிலத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கோவிலுக்கு செல்லும் வழி தடத்தில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையறிந்த  அப்பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பொது சுகாதார வளாகம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் பாஷாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர் பாஷா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊர் பொது மக்களின் ஒருவரான வழக்கறிஞர் முருகையா என்பவர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார் அப்போது நகராட்சி நகர் மன்ற தலைவர் இந்த புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊர் பொதுமக்களை ஒன்று திரட்டி வெள்ளிக்கிழமை போராட்ட மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News