இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் மனு

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ராஜபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்

Update: 2024-02-06 04:54 GMT
மனு அளிக்க வந்த பொதுமக்கள் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தனர். கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருவதாகவும் இவர்களுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டாவை ஏடி டபுள்யு மூலமாக வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த பட்டா நிலத்தை வேறு சமூக மக்களுக்கு பிரித்து அரசு வழங்கிருப்பதாகவும் தங்களுக்கு வழங்கிய இடத்தை வேறு சமூக மக்களுக்கு பிரித்து வழங்கியது கண்டித்து உடனடியாக 27 குடும்பங்களுக்கு பட்டா இடத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Tags:    

Similar News