சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம்

பழனி அருகே விநாயகா் சிலைகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழனி - திண்டுக்கல் சாலையில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2024-03-13 06:25 GMT

மறியல் போராட்டம்

பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் விநாயகா் கோயில் அமைந்திருந்தது. இந்தக் கோயில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை சாா்பில் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட இடம் தனக்குச் சொந்தமானது என தனிநபா் ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து புகாா் செய்த போது, இடமானது அவருக்குச் சொந்தமானது இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அப்போது, அங்கு வந்த சிலா் சிலைகளையும், அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினா். இதனால் பொதுமக்கள் பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Tags:    

Similar News