மகளை காணாததால் தாய் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், மரகோணத்தில் மகள் மாயமானதால் தற்கொலை செய்து கொண்ட தாயின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-15 06:54 GMT
மறியல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி வயது 40 விவசாயி. இவருடைய 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி கடந்த ஒன்பதாம் தேதி மாயமாகி உள்ளார்.

இதுகுறித்து மாணவியரின் தந்தை சக்கரவர்த்தி எனது மகளை எங்கள் கிராமத்தில் உள்ள கோபி வயது 24 என்பவர் தான் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டார். எனவே எனது மகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்பதாம் தேதி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரை வாங்கிய மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர், இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மன உளைச்சலில் இருந்த சிறுமியின் தாய் வினிதா வயது 35 நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வினிதாவின் குடும்பத்தினர் உடலை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வினிதா ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வினிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை இறந்து போன வனிதாவின் உடலை மரக்காணம்-திண்டிவனம் சாலையில் உள்ள கந்தாடு கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கிருந்தவர்கள் மாணவியை கடத்திச் சென்றது மட்டுமல்லாமல் மாணவியின் தாய் வனிதாவின் தற்கொலைக்கு காரணமான கோபியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அப்போது போலீசார் தலைமறைவாக உள்ள கோபியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு வனிதாவின் உடலையும் எடுத்து சென்றனர், இந்த சாலை மறியலால் மரக்காணம் திண்டிவனம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News