ராமநாதபுரம் அருகே மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் அருகே அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் கடையை முற்றுகிட முயற்சி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2023-12-25 14:12 GMT

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ரெகுநாதபுரம் மேலூர் சாலை பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது.

இதனால் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் வீடுகளுக்குள் குடிமகன்கள் தொந்தரவு செய்து வருவதாகவும் விவசாய இடங்களில் மதுபான பாட்டில்களை தூக்கி எறிவதால் பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை உடனே அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி கட்சி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் அரசு மதுபான கடையை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

அப்போது போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் மற்றும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வரை போலிசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பரபரப்பு நிலவியது போலீசார் குவிக்கப்பட்டு மதுபான கடைக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இது பற்றி ரகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் கூறுகையில் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு கோரிக்கையான கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அரசு மதுபான கடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News