நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இராம கொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தை மேட்டில் அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து பேனர் வைத்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-04-03 02:27 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராம கொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தை மேட்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி செய்து தராத அரசையும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி செய்து தராத அரசையும், அரசு அதிகாரிகளையும் கண்டித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் எல்லையில் விளம்பர பதாகைகளை நட்டு உள்ளனர்.மேலும் நேற்று ஊர் பொதுமக்கள் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து ஏரியூர் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தைமேடு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News