மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ஹைவேவிஸ் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

Update: 2023-12-08 09:45 GMT

ஹைவேவிஸ் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், கம்பம் உள்வட்டம், நாராயணத்தேவன்பட்டி வடக்கு (மலை) வருவாய் கிராமம், உட்கடை ஹைவேவிஸில் வரும் 13ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள்) 13.12.2023-ஆம் தேதியன்று நேரில் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News