வீரகேரளம்புதூர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
வீரகேரளம்புதூர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 09:40 GMT
தென்காசி மாவட்டம் குறும்பலாபேரியை சேர்ந்தவர் தங்கத்துரை மற்றும் அவரது மகள் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று பின்னர் அனுப்பி வைத்த நிலையில் நேற்று தங்கத்துரைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.
இதில் தங்கதுரை சாவுக்கு போலீஸ்தான் கரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் தங்கராசு உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் முன்பு பிணத்துடன் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது