அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி 

தஞ்சாவூர் மாவட்டம், நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-04 16:30 GMT

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமையில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பேரணியை வட்டார வளவய மேற்பார்வையாளர் அ.முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில், பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்பான பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு வாசகங்களை மாணவ, மாணவிகள் முழங்கிச் சென்றனர்.

மேலும், அரசுப்பள்ளியில் குழந்தைகள் படிப்பதனால் பெறக்கூடிய நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி பார்கவி, பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் அமிர்தவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரவர்த்தி, துணை தலைவர் நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராமு, ஆசிரியை மஞ்சுளா, பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News