காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரி பெரிய ஏரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-03-24 01:29 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் பெரிய ஏரி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் சுமார் 1,000 பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுெதாடர்பாக அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று காலை 10 மணிக்கு தலைவாசல் ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த தலை வாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், தலைவாசல் போலீஸ் சப்-இன ஸ்பெக்டர் சக்திவேல் பொதுமக்களிடம் பேச் சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.