சுத்திகரிப்பு தண்ணீர் கேட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்

நாகர்கோவிலில் சிடிஎம் புரம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு குடிநீரை விட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-15 04:50 GMT

தளவாய் சுந்தரம் பேச்சு வார்த்தை 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வலம்புரி விளையில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு குடிநீரை தற்போது  தெங்கம்புதூர் கால்வாயில் விடப்படுகிறது. இந்த நீரை சிடிஎம் புரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் விட வேண்டும் எனக் கூறி  அந்த பகுதி மக்கள் நடைபெற்று வந்த பணியினை தடுத்து நிறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் இத்தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும், அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான  தளவாய் சுந்தரம் நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பேச்சுவார்த்தையில் இப்பகுதி பொதுமக்களையும் விவசாயிகளையும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முறையில் இப்பணியினை நடத்திட வேண்டும் பொது மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதன் அடிப்படையில் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News