தீபத் திருவிழாவிற்கான கூடுதல் பேருந்து இயக்காததால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு போதிய பேருந்து இல்லாததால். பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரம்கானக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்று கார்த்திகை தீபம் திருவிழாவை கான திருவண்ணாமலைக்கு செல்ல குவிவிந்தனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டல பனிமலையிலிருந்து சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட சிறப்பு பேருந்துகளையும் சேலம் கோட்டம் 30 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டததாக கூறப்படுகின்றது.
கூட்டம் அதிகரிக்கவே கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை. வேலூர். சேலம் தருமபுரி. மற்றும் கிராமப்புற உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர் வெளியூர் மற்றும் உள்ளூர் செல்லும் பொதுமக்கள். பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனாலும் பேருந்து பற்றாக்குறையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அலை மோதினர். அதுமட்டுமின்றி பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு முன்பாகவே காலியாக வருகின்ற பேருந்துகளை வழிமறித்து ஏறி இடம் பிடித்து சென்ற அவலங்களும் அரங்கேறிவருகின்றது.
அதையும் தாண்டி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பொதுமக்கள் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை க்கு கூட்டம் கூட்டமாக சென்று பேருந்தில் இடம் பிடித்து பயணிக்க துவங்கினர்.
இதனால் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து நிலையமாகவே மாறியது. துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்