விஜயகாந்த்க்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
குமாரபாளையத்தில் விஜயகாந்த்க்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.;
By : King 24x7 Website
Update: 2023-12-30 16:18 GMT
குமாரபாளையத்தில் விஜயகாந்த்க்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விஜயகாந்த்க்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவனருமான கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த், உடல்நலமில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவிற்கு விடியல் ஆரம்பம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மரியாதை செலுத்தினர். விடியல் பிரகாஷ், செல்வராஜ், பஞ்சாலை சண்முகம், பாண்டியன், சமூக சேவகி சித்ரா, பன்னீர்செல்வம், தேவி, அங்கப்பன், சுந்தர்ராஜன், சதீஷ், ராஜாத்தி, ஜமுனா, தீனா, மற்றும் பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.