ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் வாக்காளர் உறுதிமொழி பேரணி
ராசிபுரம் நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் வாக்காளர் உறுதிமொழி பேரணி நடைபெற்றது.
Update: 2024-03-19 18:07 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா தலைமையில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 க்கான வாக்காளர் உறுதிமொழி வாசங்களுடன் பேரணி நடைபெற்றது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாடிற்க்கு ஆட்ப்படாமல் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் வாக்களிப்போம் என பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியேற்று முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . இந்த நிகழ்வில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.