மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-04 05:10 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் நல பணியாளர்களின் 33 வருட காலமாக தங்கள் அனைவருக்கும் உண்டான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 13 ஆயிரத்து 500 குடும்பங்களை காப்பாற்ற வேண்டி, தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், மக்கள் நல பணியாளர்களின் பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும், 9.11. 2011 முதல் இறந்து போன மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஐந்து லட்சம் நிவாரண தொகையும் வாரிசுகளுக்கு வேலையும் வழங்கிட வேண்டும் பணியிட மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் சம்பளம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் தேவராஜ் செயலாளர் செல்வகுமார் இளவழகன் சரவணன் மற்றும் ஆலோசகர் சீவகன், பால்ராஜ், கல்யாணி விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News