வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
பள்ளிபாளையம் நகராட்சி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 16:09 GMT
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
பள்ளிபாளையம் நகராட்சி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு பள்ளிபாளையம் அக்டோபர் 28 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் ப. பாலமுருகன், ஆணையாளர் தாமரை ஆகியோர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக 27.10.2023 முதல் 09.12.2023 வரை (04.11.23, 18.11.23 சனிக்கிழமை 05.11.23,19.11.23 ஞாயிற்றுக்கிழமை) புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம், பெயர் பிழை திருத்தம் போன்ற சிறப்பு முகாம்கள் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. ஆகவே இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்