ஜன.22 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 22-ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.

Update: 2024-01-05 08:20 GMT

மாவட்ட ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம்-2024 க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான கால அட்டவணையில் இந்திய தேர்தல் ஆணையம் கீழ்கண்ட மாற்றங்களை செய்துள்ளது. அதனடிப்படையில் 26.12.2023 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற இருந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்றும், 01.01.2024 (திங்கள் கிழமை) அன்று நடைபெற இருந்த சுகாதார அளவுருக்களை சரிபார்த்தல், மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் அனுமதி பெறுதல், தரவுகளை புதுப்பித்தல் மற்றும் அச்சிடுதல் 17.01.2024 அன்றும், 05.01.2024 அன்று நடைபெற இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 22.01.2024 அன்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 12.01.2024 வரை வாக்காளர் பட்டியலின் ஆரோக்கியத்தினை உயர்த்திடும் காரணிகளான இரட்டைப் பதிவுகள் நீக்கம், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும் எனவும் பொது மக்கள் இப்பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News