புதுச்சேரி- திருப்பதி ரயில் சேவை ரத்து !

புதுச்சேரி- திருப்பதி ரயில் சேவை ரத்து: திருத்தணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளனர்.

Update: 2024-03-16 05:02 GMT

ரயில்

சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என அறிவித்தது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ரயில் நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு நவீன ரயில் நிலையமாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி ரயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் வரும் 12ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டும் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. அவ்வகையில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு காஞ்சிபுரம் வழியாக செல்லும் 16112 என்கொண்ட ரயில் நாள்தோறும் சென்று வருகிறது. இதில் காஞ்சிபுரத்திலிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், சென்னைக்கு மருத்துவ சேவைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கில் இந்த ரயிலில் பயணித்து செங்கல்பட்டு வரை சென்று அங்கிருந்து மின்சார தொடர் வண்டி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்த ரயில் சேவை நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அடுத்து வரும் கூட்ட நெரிசல்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் இன்னலுறும் நிலையில் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் சென்னை ரயில் பயணிகள் சங்க செயலாளர் ரங்கநாதன் ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தார். இதனை பரிசிலீனை செய்த ரயில்வே நிர்வாகம் புதுச்சேரியில் இருந்து திருத்தணி வரை இந்த ரயில் சேவை செயல்படும் என அறிவித்துள்ளது. திருத்தணியில் இருந்து திருப்பதி வரை இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதற்கு காஞ்சிபுரம் சென்னை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News