புதுக்கோட்டை மக்களை காணவில்லையா..?
போஸ்டர் ஒட்டுவதில் போட்டிப்போட்டுக் கொள்ளும் அரசியல் கட்சிகள்.
புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அண்மை காலமாக அரசியல் கட்சிகளுக்கு இடையே போஸ்டர் மூலம் எம்பிகளை காணவில்லை என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பானது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் 71 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அந்த கேள்விக்கு விடை அளித்தார்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் புதுக்கோட்டை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் புதுக்கோட்டை பொதுமக்களை காணவில்லை, அவர்கள் திருச்சி ராமநாதபுரம் சிவகங்கை அல்லது கரூரில் உள்ள எம்பிகளை பார்க்க சென்றிருப்பார்களோ? என்ற வடிவேல் காமெடியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை புதுக்கோட்டை வால் பொதுமக்கள் ஆங்காங்கே நின்று படித்து செல்கின்றனர். ஏற்கனவே திராவிட கட்சிகள் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியினரும், போஸ்டர் போரில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.