புதுக்கோட்டை வாகன சோதனையில் ரூ. 75,470 பறிமுதல் !

வாகன சோதனையில் ரூ. 75,470 கைப்பற்றி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-03-26 09:41 GMT
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி பிரிவு சாலையில் வாகன சோதனையில், திருமயம் கூட்டுறவு சார் பதிவாளர் சியாமாளா தலைமையிலான எஸ்ஐ சுப்பிரமணியன், காவலர்கள் ஜோஸ்பின் மேரி, அம்சவல்லி, தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 75,470 கைப்பற்றி வட்டாட்சியர் புவியரசனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான வில்சனிடம் வட்டாட்சியர் புவியரசன் பிடிபட்ட பணத்தை ஒப்படைத்தார்.
Tags:    

Similar News