சங்கரன்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் பூஜை
Update: 2023-11-14 02:05 GMT
கந்த சஷ்டி விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் பூஜை நடைபெற்றது. அதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.