புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-25 01:23 GMT

தேரோட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது. பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெற்ற பின்பு தீபாரதனை நடைபெற்றது. தேரோட்டத்தை பங்குனி உத்திர தேர் திருப்பணி குழு தலைவர் பாலாஜி பிஎஸ்எஸ் சங்கரநாராயணன், புளியங்குடி நகராட்சி தலைவி விஜயா சவுந்தரபாண்டியன், கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News