நாகர்கோவிலில் தினசரி அல்லல்படும் பொதுமக்கள்

ஒழுகினசேரி பாலம் சாலைக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வரும் வடசேரி ரயில்வே கிராசிங் ஆராட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால் மாற்று பாதையை ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-07 08:13 GMT
 வாகன நெரிசல் 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து  நெல்லை செல்லும் ஒழுகினசேரி சாலையில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக தற்காலிகமாக ஒழுகினசேரி பாலம் வழியாக செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக வடசேரி ரயில்வே கிராசிங் ஆராட்டு ரோட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் டூ வீலர்களை அந்த சாலையில் பயன்படுத்தி வருகின்றனர்.  தினசரி பணி காரியமாக இருசக்கர வாகனத்தில் செல்லுதல், பள்ளிக்களுக்கு கல்லூரிகளுக்கு, மருத்துவமனைக்கு என தினசரி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள்  தங்கள் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி மாற்று பாதையில் வாகனங்கள் சிரமம் இல்லாமல் செல்ல சேதமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். என கோரிக்கை எழுந்துள்ளது
Tags:    

Similar News